FOREX

                                                          LOAN AND PROPERTY GUIDE


Security Agreement

கடன் வாங்கும்போது ஒரு சொத்தையோ அல்லது பொருளையோ பாதுகாப்புக்கு ஈடாக தரும்போது உரியமுறையில் ஒப்பந்தம் செய்துகொள்வதை தான் Security Agreement என்று அழைக்கபடுகிறது. கடன் வாங்குபவர் கடனை ஒழுங்காக திரும்ப செலுத்தவில்லை எனில், இந்த Security Agreement ல் சொல்லபட்டிருக்கும் சொத்தை பறிமுதல் செய்து விற்று, கடனை தீர்க்க எடுத்து கொள்ளப்படும்.

Settlement Agent

ஒரு சொத்தை வாங்குபவர் மற்றும் விற்பவருக்கும் இடையில் செயல்படும் நபரையே Settlement Agent என கூறுவது உண்டு. ஒரு சொத்தின் விற்பனை முடிந்து, பணப் பரிவர்த்தனை முடியும் வரையில் Settlement Agent ன் செயல்பாடு மிக முக்கியம். வாங்குபவருக்கு உரிமை மாற்றம் செய்வது மற்றும் விற்பவருக்கு பணத்தை சேர்ப்பிப்பது போன்ற பொறுப்புகள் இந்த Settlement Agent ஐ சார்ந்ததாகும். இவரை Closing Agent and Conveyancer என்றும் அழைப்பதுண்டு.   


Subject Offer

சொத்துக்களை விற்கும்போது, வாங்குபவர் குறிப்பிட்ட தொகைக்கு சலுகை கேட்பதை தான்  Subject Offer என்று கூறபடுகிறது. Subject Offer என்பது உறுதி செய்யபடாத ஒன்றாகும். இதன் மூலம் சந்தையில் சொத்தின் விலையை பொதுவாக கண்டறியலாம், demand ஐ பொருத்து இந்த வகை offer கேட்கப்படும்.

 Security Deposit

ஒரு சொத்தை வாடகைக்கு எடுக்கும்போது சொத்தின் உரிமையாளருக்கு தரப்படும்  Deposit தொகை  Security Deposit எனபடுகிறது. contract ஒப்பந்தங்களிலும் இதுபோன்ற Security Deposit தொகை என்பது நடைமுறையில் உள்ளது. இத்தொகையை திரும்ப தருவதும், தராததும் பரிவர்த்தனையின் தன்மையை பொருத்து இருக்கும்.

 Sub-Lease

வீட்டின் அல்லது நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதியோடு வாடகைதாரர் உள்வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதுதான் Sub-Lease என்று அழைக்கபடுகிறது. வசிப்பதுக்கு அல்லது கமர்ஷியல் தேவைகளுக்காக இந்த Sub-Lease விடப்படும். பெரும்பாலும் ஒரிஜினல் வடகைதாரர்க்கு சொல்லபட்டிருக்கும் வாடகை தொகை மற்றும் மற்ற விதிமுறைகள் Sub-Lease ஆக வருபவருக்கும் பின்பற்றப்படும்.

Net Lease

ஒரு சொத்தை குத்தகைக்கு விட்டிருக்கும்பொது அந்த சொத்தின் மீதான வரிகள், காப்பீட்டு பிரீமியம் மற்றும் பராமரிப்பு கட்டணங்கள் உள்ளிட்டவைகளை குத்தகைக்கு எடுத்திருப்பவர் கட்டுவது தான் Net Lease எனப்படும்

Gross Lease

ஒரு சொத்தை குத்தகைக்கு விட்டிருக்கும்பொது அந்த சொத்தின் மீதான வரிகள், காப்பீட்டு பிரீமியம் மற்றும் பராமரிப்பு கட்டணங்களை அதன் உரிமையாளர் கட்டுவதுக்கு  Gross Lease என்று பெயர்.

True Lease

ஒரு அசையும் அல்லது அசையா சொத்தை குத்தகைக்கு விடும்போது அதனை வாடகையின் நிமித்தமாக மட்டுமே அனுபவித்து கொள்வதுதான் True Lease. True Lease என்பது குத்தகைக்கு எடுத்திருப்பவர் அந்த சொத்தின் மீது எந்தவித உரிமையும் கொண்டாட முடியாது. குத்தகைக்கு விடப்பட்ட இடத்திக்கு வரி சலுகைகள் True Lease ல் பெறமுடியாது.

Grantee

சொத்தை பெறுபவரை குறிக்கும் சொல் இது. ஒரு சொத்தை வாங்கும் நபரை Grantee என்றும் , கொடுக்கும் நபரை granter என்றும் குறிப்பிடுவதுண்டு. Grantee யின் பெயருக்குத்தான் சொத்தின் உரிமை சென்றுஅடையும்.

Grant Deed

real estate சொத்தை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சட்டப்படி மாற்றுவதக்கான ஆவணம் தான் Grant Deed. இந்த ஆவணத்தில் யார் பெயருக்கு சொத்து இருந்தது , அந்த சொத்து இருந்த இடம், சொத்தை வாங்கும் நபரின் விபரம், சொத்தை விற்கப்படும் தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

Unrecorded Deed

அசையா சொத்தின் உரிமையை ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு மாற்றம் செய்யும் போது ஏற்படுத்தப்படும் ஆவணத்தை Deed என்கிறோம். எல்லாவிதமான ரியல் எஸ்டேட் சொத்துக்களும் மற்றவகை சொத்துக்களும் உரிமம் மாற்றம் செய்யும்போது பத்திரம் மூலம் பதிவு செய்துகொள்வது பாதுகாப்பனதாகும். பதிவு செய்யாமல் போகும் பத்திரங்களைத்தான் "Unrecorded Deed" என்கிறார்கள்.

Testamentary Will

Testamentary Will என்பது பாரம்பரிய முறையில் உயில் எழுதுவதைக் குறிக்கும். ஒரு தனிநபர் தனக்கு சொந்தமான சொத்துக்களை தனது வாரிசுகளுக்கோ அல்லது தனக்கு விருப்பமான நபர்களுக்கோ சட்டபூர்வமாக எழுதி வைப்பது Testamentary Will எனப்படும். Testamentary உயிலில் மைனர் குழந்தைகளுக்கு சொத்தை எழுதி வைக்கும்போது சரியான பாதுகாவலரை நியமிப்பது அவசியம்.

Gross Income Multiplier

சொத்தின் விற்பனை மதிப்பை அதன் ஆண்டு வருமானத்தால் வகுக்க கிடைப்பதுதான் Gross Income Multiplier. shopping complex, apartment, commercial real estate போன்ற இடங்களை மதிப்பிட "Gross Income Multiplier" formula பயன்படுத்தபடுகிறது.

Real Property

எந்த ஒரு சொத்தும் நேரடியாக நிலத்தின் மீது இருந்தால் அந்த சொத்தை
Real Property என்று கூறுவது வழக்கம். நிலத்தின் மீது கட்டபட்டிருக்கும் கட்டடங்கள், மரங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்டவைகளும், நிலத்தின் மீது இருக்கும் எந்தவித அசையாத சொத்துக்களும் Real Property ஐ சார்ந்தது. அசையும் சொத்துக்கள் எதுவும் Real Property யில் வராது.

Rent Ceiling

வீடோ, நிலமோ வாடகைக்கு விடும் வடகைதாரர் நிர்ணயிக்கும் அதிக பட்ச வாடகையை குறிக்கும் சொல்தான் Rent Ceiling. பொதுவாக சட்டத்தில் நிர்ணயிக்கப்படும் வாடகை மிக குறைவாக இருப்பதால், வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு கட்டுபடியாகாது. மார்க்கெட் நிலவரப்படி நிர்ணயிப்பது நிலத்தின் அல்லது கட்டட உரிமையாளர்களாக தான் இருக்கிறார்கள்.    

Rent Expense

ஒரு கட்டடதிக்கொ அல்லது நிலதிக்கோ தொழில் நிமித்தமாக வாடகை கொடுத்தால் அதனை Rent Expense என்று குறிப்பிடுவார்கள். தொழில் நிமித்தமாக கொடுக்கும் இந்த வாடகை தொகை வரிக்கு உட்படாத செலவினமாகும். வாடகை இடத்திக்கு சொத்து வரி செலுத்துவதையும் செலவு கணக்கில் எழுதலாம்.

 Reserve Fund

தனிப்பட்ட நபரோ அல்லது தொழில் செய்பவர்களோ தங்களுக்கு கிடைக்கும் தொகையில் சிறு தொகையை அவசரதேவைக்கு சேர்த்து வைப்பது தான்
 Reserve Fund. இதுபோன்ற  Reserve Fund ஐ வங்கி சேமிப்பு கணக்கிலோ அல்லது சுலபமாக பணமாக்ககூடிய liqvid fund களிலோ முதலீடு செய்து வைப்பது வழக்கம்.

Return On Capital Gains

முதலீடு அல்லது ரியல் எஸ்டேட் ல், முதிர்வு அடையும் போதோ அல்லது விற்றபின் கிடைக்கும் மூலதன ஆதாயம் தான்  Capital Gains எனப்படும். இந்த மூலதன ஆதாயத்தின் மீது கிடைக்கும் நிகர வருமானம்தான் Return On Capital Gains ஆகும். உதாரணமாக, ஒருவர் சொத்தை விற்கும்போது கிடைக்கும் லாபத்திலிருந்து கமிஷன், வரி, வட்டி, இதர விற்பனை செலவுகளை கழித்து போக கிடைப்பதாகும்.

Realized Gain

ஒரு சொத்தை வாங்கிய விலையைவிட அதிக விலைக்கு விற்றதின் மூலம் கிடைக்கும் லாபத்தை குறிப்பிடுவது.  Realized Gain வருமானதிக்கு வரி செலுத்தவேண்டியது வரும்.

Simple Interest

கடன் தொகைக்கு தரப்படும் வட்டி விகிதத்தை குறிப்பிடும் சொல் Simple Interest. கடன் தொகையை வட்டி விகிதம் மற்றும் கடனுக்கான தவணைக் காலத்துடன் பெருக்கி, நூறால் வகுத்து கிடைப்பதுதான் Simple Interest. குறுகியகால கடன்களுக்கு இந்தவகை வட்டி விகிதங்கள் கணக்கிடப்படும். இதில் வட்டிக்கு வட்டி கணக்கிடப்படமாட்டாது.

Secondary Beneficiary

ஒரு சொத்தின் உரிமையாளர் இறந்துபோகும் தருவாயில் அவருடைய உயில் படி, அந்த சொத்தை அடைபவரை Secondary Beneficiary என்று குறிப்பிடுவார்கள். பொதுவாக நிதி சொத்து, insurance இழப்பீடு போன்றவற்றில் Secondary Beneficiary
க்கு விதிமுறைப்படி உரிமை கிடைக்கும்.

Spending Pace

உழைத்து சம்பாதித்து சேமித்த காலம் முடிந்து, செலவு செய்யும் காலத்தையே  Spending Pace என குறிபிடுகிறார்கள். அதாவது ஓய்வு காலத்தில் வருமானம் எதுவும் இல்லாமல் அதுவரையில் சேமித்து வைத்த பணத்தை வைத்து சுற்றுலா செல்வது, மனதுக்கு பிடித்த காரியங்களை செய்வது, பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட செலவினங்களை செய்வதை Spending Pace என்கிறார்கள்.


 What is Teaser Loan?

கடன் வாங்கிய சில ஆண்டுகளுக்கு குறைந்த சதவிகிதத்தில் வட்டி செலுத்திவிட்டு, பின்னர் அதிக சதவிகிதத்தில் வட்டியை செலுத்துவதை Teaser Loan என்று அழைக்கபடுகிறது. செயற்கையாக குறைக்கப்பட்ட வட்டி விகிதம், குறைந்த அளவிலான முன் தொகை ஆகிய இரு கவர்சிகரமான அம்சங்கள் இதில் இருப்பதால், குறைந்த சம்பளம் பெறுகிறவர்கள் வீடு கடனை வாங்கும் போது இந்த Teaser Loan என்கிற கடனை பயன்படுத்தி கொள்கின்றனர். Teaser Loan ஐ பொறுத்தவரை வாங்கும்போது திரும்ப செலுத்தும் காலம் அதிகரிக்கும். அதனால் மறைமுகமாக செலுத்தவேண்டிய வட்டியும் கூடும்.

What Is Teaser Rate?

சந்தையில் பொதுவாக வசூலிக்கும் வட்டி விகிதங்களை விட குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதமே Teaser Rate என்கிறோம். குறைந்த சதவிகிததிலான வட்டி விகிதம் சில மாதங்கள் மட்டுமே இருக்கும். வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, Teaser Rate எனப்படும் இந்த வகை கடன் வாங்கியவர்கள் கூடுதல் தொகை செலுத்தவேண்டி வரலாம்.

What is Transfer of Mortgage?

ஒரு வங்கியிலோ அல்லது நிதி நிறுவனத்திலோ வாங்கியிருக்கும் கடனை வேறு வங்கிக்கோ அல்லது நிறுவனதிக்கோ மாற்றுவதுதான் Transfer of Mortgage என்பது. இதை கடன் தந்தவரோ அல்லது வாங்கியவரோ தனது ஒப்புதலின் பேரில் செய்துகொள்வது, Transfer of Mortgage என்பதில் எல்லாவகை கடன்களையும் மாற்றம் செய்ய முடியாது. இப்படி கடனை மாற்றும் போது கடன் தரும் வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ கடனை மாற்றித்தரும் நபருக்கு கடனை திருப்பி செலுத்தும் அளவிக்கு சம்பளம் வருகிறதா, அவரது கடந்த கால நிதி செயல்பாடுகள் எப்படி இருந்தது உள்ளிட்ட விசயங்களை ஆராய்ந்துதான் Transfer of Mortgage (கடனை மாற்றும்) செய்துகொள்ளும்.

What is Taxable Gain?

ஒரு சொத்தை விற்பனை செய்யும் போது அதன்மூலமாக கிடைக்கும் லாபத்திக்கு விதிக்கப்படும் வரியைதான் Taxable Gain அல்லது மூலதன ஆதாய வரி என்கிறார்கள். பங்குகள், பாண்டுகள், ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி மற்றும் தனிப்பட்ட சொத்துக்களை விற்கும் போது கிடைக்கும் ஆதாயதிக்கு விதிக்கப்படும் வரியே  Taxable Gain என்பது. பொதுவாக நீண்ட கால மூலதன ஆதாயதிக்கு குறைந்த வரியும் குறுகிய கால மூலதன ஆதாயதிக்கு அதிக வரியும் இருக்கும். நீண்ட காலம், குறுகிய காலம் என்பது ஒவ்வொரு வகை சொத்துக்கும் மாறுபடும்.

Reset Rate

வீட்டு கடன் அல்லது அடமான கடனுக்கான மாற்ற தகுந்த கடன் வட்டியில் குறிப்பிட்ட கால அளவில் வட்டி மாறும்போது புதிய வட்டியை Reset Rate என்பார்கள். பொதுவாக இந்த வட்டி 1-5 ஆண்டுகள் அமலில் இருக்கும். நாட்டின் பொருளாதார மாற்றதிக்கு ஏற்ப reserve bank வட்டி விகிதங்களை மாற்றும்போது இந்த வட்டி விகிதம் மாறும். வீட்டுகடன் அல்லது அடமானகடன் வாங்கும் போதே கடன் ஒப்பந்தத்தில் இந்த "Reset Rate" எப்படி கணக்கிடப்படும் என்ற விவரத்தை தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த Reset Rate என்பது ஏற்கனவே இருக்கும் வட்டி விகிதத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இந்த கடன், சந்தை வட்டியைப் பொருத்து இருக்கும்.  

Return Protection

credit card உரிமையாளர்கள் credit card மூலமாக வாங்கும் பொருட்கள் திருப்தி இல்லை என்றால், அதை ஒப்படைத்துவிட்டு பணத்தை திரும்ப பெறுவது ஆகும். பொருளை credit card  கம்பனிக்கு திரும்பக் கொடுத்தால்தான் பணம் கிடைக்கும். இப்படி பணத்தைத் திரும்பப் பெற பொருள் வாங்கியதற்கான அசல் ரசீது மற்றும் credit card  அறிக்கையையும் குறிப்பிட்ட காலதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சலுகைக்கான அதிகபட்ச தொகை credit card  கம்பெனியால் குறிப்பிடபட்டிருக்கும்.   

Surcharge

ஒரு பொருள் அல்லது சேவை மீது விதிக்கப்படும் வரிக்கும் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் Surcharge எனபடுகிறது. பெரும்பாலும் இது ஒரு தற்காலிக கட்டணமாக இருக்கும். பொருளாதார மந்தநிலை சமயத்தின்போது இந்தக் கூடுதல் வரி வசூலிக்கபடுவது வழக்கமாக இருக்கிறது.


Tax Free

ஒரு சில பொருட்களுக்கு அல்லது சில நிதித் திட்டங்களுக்கான (government bonds) வருமானதிக்கு அரசு வரி விலக்கு அளிப்பதாகும். உதாரணதிக்கு, Tax Free பாண்டுகளை குறிப்பிடலாம். இதில், முதலீட்டின் மீதான வருமானதிக்கு வரி கிடையாது. பொருளாதார நிலையை மேம்படுத்தவும், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முதலீட்டை அதிகரிக்கவும் அரசு இம்மாதிரியான வருமானதிக்கு வரியில்லா திட்டங்களை அறிமுகபடுத்துகிறது. 


Tax Rate

தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து அரசு வசூலிக்கும் வரியின் விகிதம்தான் இந்த  Tax Rate. இந்த வரி விகிதத்தை அரசாங்கமே நிர்ணயம் செய்கிறது. தனிநபர்களுக்கான வருமானம் மற்றும் நிறுவனங்களின் வருவாயைப் பொருத்தும் இந்த வரி விகிதம் நிர்ணயம் செய்யபடுகிறது.

Voluntary Compliance

வருமான வரி செலுத்த வேண்டியவர், அவரது வருமானம் மற்றும் அவர் பெரும் வரி தள்ளுபடி போன்றவற்றை தானே முன்வந்து அரசுக்கு தெரிவிப்பதுதான் "Voluntary Compliance" எனபடுகிறது.

Wealth Tax

ஒருவரின் சொத்து மதிப்பு 30 லட்சத்துக்கு மேல் செல்லும்போது இந்த Wealth Tax விதிக்கபடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீடு நாளான மார்ச் 31 ல் ஒருவருடைய செல்வத்தின் மதிப்பு கணக்கிடபடுகிறது. செல்வத்தின் மதிப்பில் 1 சதவிகிதம் Wealth Tax கட்டவேண்டும். இந்த Wealth Tax கணக்கிட ஒருவரின் கட்டடம், நிலம், கார், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கப்பல், விமானம் போன்றவற்றின் மதிப்பு எடுத்துக்கொள்ளப்படும்.

Transfer Tax

ஒரு சொத்தை மாற்றம் செய்யும் போது அந்த சொத்திக்காக செலுத்தப்படும் வரியைதான் Transfer Tax என்கிறார்கள். சொத்தை விற்கும் நபர்தான் இந்த Transfer Tax ஐ செலுத்த கடமைப்பட்டவர். Gift and Estate வரிகள் இந்த வகையில் வரும்.

         
Trustor

Trustor என்பவர் மூன்றாம் நபரின் நலனுக்காக சொத்துக்களை அல்லது பணத்தை trust ஐ உருவாக்கி தானம் வழங்கி Trustee ன் நிர்வாகத்தில் ஒப்படைப்பவரை Trustor என்கிறோம்.

Trustee

மூன்றாம் நபரின் சொத்தை நிர்வகிப்பவரை குறிக்கும் சொல் Trustee. ஒரு  trust அமைத்து அந்த  trust ன் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்துக்களை நிர்வகிக்க முடியுமே தவிர, Trustee அந்த சொத்துக்களை விற்கவோ அல்லது அதன் மூலம் அடையவோ முடியாது. அறக்கட்டளை, trust fund அல்லது ஓய்வூதிய திட்டங்கள் மூலம் வரும் தொகையை நிர்வகிக்க அமரதபடுபவரே Trustee ஆகும்.

Trust Property

Trust அமைக்கும்போது அந்த Trust க்கு சொந்தமான சொத்துக்களைதான் Trust Property என அழைப்பார்கள். இந்த சொத்துக்கள் நிலமாகவோ, கட்டடமாகவோ, பாண்டுகளாகவோ அல்லது இன்சூரன்ஸ் பாலிசியாகவோ இருக்கலாம். இந்த சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு Trustee யிடம் ஒப்படைக்கப்படும். இந்த சொத்தின் மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு Trust அமைத்த நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும்.      

Trust Fund

ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்போ குறிப்பிட்ட தொகையை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த ஒதுக்கி வைக்கும் தொகை. இந்த Trust Fund என்பது பணமாகவோ, நிறுவன பங்குகலாகவோ, பாண்டுகளாகவோ அல்லது வேறு வகை நிதி திட்டங்களாகவோ இருக்கும். குறிப்பிட்ட வயது அடைன்தபின்போ அல்லது குறிப்பிட்ட நிகழ்வு நடந்த பின்போ Trust Fund ஐ உரிமையுள்ள நபரானவர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.