post 2


எப்படி புரோக்கர்கள் ஏமாற்றுவார்கள் trader களை :

இன்று இருக்கும் broker கள் பெரும்பாலும் தன்னுடைய வருமானத்தை பெருக்க என்ன வழியோ அதைதான் செய்கிறார்கள். தவறில்லை, அதே சமயம் தன்னை நம்பி வரும் முதலீட்டாளர்களை  நல்ல முறையில் வழி நடத்த நினைப்பதில்லை. மார்க்கெட் -ல் உள்ள risk ஐ புரிய வைப்பதில்லை, காரணம் broker office ன் வாடகை, கரண்ட் பில், டெலிபோன் கட்டணம், சம்பளம் என பல செலவுகளையும் சமாளிக்க trader களை நம்பியே உள்ளதால் broker களும் trader களை தினசரி வர்த்தகத்தை ஊக்குவிக்கிறார்கள். நாங்கள் கொடுக்கும் calls களை மட்டும் trade செய்யுங்கள் போதும் நல்ல நல்ல recommend களை வழங்குகிறோம் 10% முதல் 30% வரை சம்பாதிக்க முடியும் என்று கூறி தன்னை நோக்கி வரும் client களுக்கு ஆசையை தூண்டுகிறார்களே தவிர வேறொரு risk யையும் கூறுவதில்லை. அதே சமயம் நீண்டகால முதலீட்டாளர்களையும்  குறுகிய கால முதலீட்டாளர்களாய் மாற்றி விடுவார்கள். அதாவது கொஞ்சம் லாபம் வந்தாலே broking  office ல இருந்து client க்கு போன் வந்துவிடும், sir உங்க stock மேலே வந்திருக்கு விற்று விடலாம்னு அறிவுரை கொடுப்பார்கள், client-ம் ஆசை பட்டு விற்றுவிடுவார். ஒரே ஒரு விஷயம் தான் broker கள் சம்பாதிக்க "தன்னை நோக்கி வரும் trader களை அதிக வர்த்தககங்களை செய்ய வைப்பது தான் அவர்கள் தொழிலின் முக்கிய மூலதனமே". இங்கே broker களை குறை கூறுவதாய் யாரும் நினைக்கவேண்டாம், ஆனால் 90 %  க்கு மேல் broker கள் இப்படி தான் இருக்கிறார்கள்.       

broker களிடம்  ஏமாறும் வழிகள்:
முதலீட்டளர்கள் தன்னுடைய trading account ஐ புரோக்கர்களிடமே  trade செய்ய அனுமதிக்காதீர்கள். ஏனென்றால் கமிஷனுக்காக அவர்கள் தன் இஷ்ட்டம் போல் trade செய்வார்கள்,

அதே சமயம் broker களை குறை கூறுவது போல் முதலீட்டாளர்களையும் குறை சொல்லலாம், 1 லட்சம் invest பண்ணறேன் எனக்கு மாதம் 10 ஆயிரம் வேண்டும் என்பார்கள் , ஒரு சிலர் அதைவிட அதிகம் கேட்பார்கள், இன்னும் சிலர் தினமும் 5 அல்லது 10 ஆயிரம் வேண்டும் என்பார்கள். தற்போது market -ல் அதிகமான நபர்கள் broker தொழில் ஈடுபட்டாலும் அவர்களில் 90% பேருக்கு F & O பற்றி முழுமையாக தெரியாதவர்கள் என்பதை முதலீட்டாளர்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.               


trade செய்து பணத்தை இழந்தவர்கள் தான் இன்று பெரும்பாலும் broker and advisor களாக இருக்கிறார்கள் என்பதை முதலீட்டாளர்கள் தான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.