TRADERS GUIDE

                                                    Loan And property Guide-2

What is Foreclosure?

வங்கியில் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய கடன்தாரர்கள் கடன் தொகை மற்றும் வட்டியை கட்டாதபோது, அடமான ஒப்பந்தத்தின்படி அடமானம் வைக்க பட்ட சொத்தை ஜப்தி செய்து விற்பனை செய்வதை குறிப்பது Foreclosure என்பதாகும். சில நேரங்களில் வங்கி இந்த Foreclosure முறையை அமல்படுதுவதக்கு முன் தனது கடன்தாரர்களுக்கு கால அவகாசம் தரும். அந்த காலதிக்குள் கடன்தாரர் தங்களது கடனை கட்டி அடமானம் வைத்த சொத்து ஜப்திக்கு வராமல் தடுக்க முடியும்.

Foreclosure Action

கடன் வாங்கிய நபர்கள் தங்களது கடன் தொகையை அடமான ஒப்பந்தத்தின் படி திரும்ப செலுத்தாதபோது, அந்த அடமான சொத்துக்களை ஏலம் விடுவதை குறிப்பது Foreclosure Action என்பது. இந்த ஏலம் நடைபெருவதக்கு முன் சம்பந்தப்பட்ட கடன்தாரருக்கு தகவல் தெரிவிப்பார்கள்.      

What is Future Advance?

அடமான கடனை கட்டி முடித்ததற்கு பின் தரப்படும் கடனை குறிக்கும் சொல் Future Advance. Home equity loan என்றும் இதை கூறுவார்கள், இந்த கடனிக்கு சொத்தின் மீது ஏற்கனவே அடமானம் வைத்திருந்தது தொடரும்.

Explains of Front-end Ratio:

தனிப்பட்ட நபரின் வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் அடமானக் கடனுக்குக் கொடுக்க முடியுமோ, அந்த சதவிகிதம்தான் Front-end Ratio என்பது. மாத மொத்த சம்பளத்தில் வீட்டுக் கடனுக்காக செலவிடப்படும் செலவை வகுத்தால் கிடைப்பது. இந்த சதவிகிதத்தை கணக்கிட்டு,வீட்டு கடனை வங்கி தரும். வீட்டு கடன் செலவு என்பது அசல், வட்டி, வீட்டு வரி, காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
 Front-end Ratio= மாத வீட்டு கடன் செலவு/மாத வருமானம்.

Secondary Beneficiary

ஒரு சொத்தின் உரிமையாளர் இறந்துபோகும் தருவாயில் அவருடைய உயில்படி, அந்த சொத்தை அடைபவரை Secondary Beneficiary என்று குறிப்பிடுவார்கள். பொதுவாக நிதி சொத்து, இன்சூரன்ஸ் இழப்பீடு போன்றவற்றில் Secondary Beneficiary க்கு விதிமுறைப்படி உரிமை உண்டு.

Definition of "Unrecorded Deed"

அசையா சொத்தின் உரிமையை ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு மாற்றம் செய்யும்போது ஏற்படுத்தப்படும் ஆவணத்தை Deed என்கிறோம். எல்லாவிதமான ரியல் எஸ்டேட் சொத்துக்களும் மற்றவகை சொத்துக்களும் உரிமம் மாற்றம் செய்யும்போது பத்திரம் மூலம் பதிவு செய்துகொள்வது பாதுகாப்பானதாகும். பதிவு செய்யாமல் போகும் பதிரங்களைதான் Unrecorded Deed என்கிறார்கள்.

 What is Residual Income?

ஒரு தனிப்பட்ட நபர் வாங்கும் சம்பளத்தில் தனிப்பட்ட செலவுகள் மற்றும் கடன் போக மீதமிருக்கும் தொகையை குறிப்பதை Residual Income என்று அழைக்கிறோம். இந்த "Residual Income" என்பது அனைத்து கடன்களும், செலவுகளும் கொடுத்த பின்பு கணக்கிடபடுவது. "Residual Income" எவ்வளவு என்பதை கணக்கிட்டுதான் தனிப்பட்ட நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும். இதை "Take Home Salary" என்றும் குறிப்பிடுவார்கள்.    

Explains of "Reserve Mortgage"

இது வழக்கமான வீட்டு கடனுக்கு நேர் எதிரானது. இதன் மூலம் ஆதரவில்லாத மூத்த குடிமக்கள் தங்கள் வீட்டை அடமானம் வைத்து, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்திடம் கடனாக பெற்றுகொள்ளலாம். அல்லது மொத்த தொகையையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. அடமானதிக்கு ஈடாக வைக்கப்படும் வீட்டில் கடைசி காலம் வரையில் கணவன்/மனைவி வசித்து கொள்ளலாம். இருவரது மறைவுக்குப்பிறகு, கடனாக வழங்கப்பட்ட தொகை, வட்டியோடு கணக்கிடப்படும், இந்த தொகைக்கான பணத்தைக் கடன் தந்த வங்கி வீட்டை விற்று எடுத்துகொள்ளும். மீதி தொகை வாரிசுக்குத் தரப்படும், வாரிசு விரும்பினால் கடன், வட்டி பணத்தைக் கட்டி வீட்டை மீட்டுக்கொள்ளலாம். இந்த தொகைக்கு வருமான வரி கிடையாது.        


What is Credit Score?

கடன் விஷயத்தில் சரியான நிலையைக் கடைபிடிப்பதே நீங்கள் நல்ல வட்டியில் கடன் பெற உதவும். உங்களின் தொடர்ச்சியான credit நிலையானது, credit rating agency மூலம் பதிவு செய்யபடுகிறது. அது உங்களுக்கு ஒரு credit score ஐ வழங்குகிறது. மேலும் வங்கிகளுக்கு அந்த score வழங்கபடுகிறது. உங்களுக்கு கடன் வழங்குவதா? வேண்டாமா?எவ்வளவு வட்டி நிர்ணயம் செய்வது என்ற தீர்மானிபதுக்கு வங்கிகள் Credit Score ஐ அளவுகோலாக பயன்படுத்துகின்றன. நீங்கள் முன்பு கடன்களை முறையாக திருப்பி செலுத்தியிருந்தால், அதிக score இருக்கும். அது உங்களுக்கு விரைவாக கடன் பெற்றுதருவதுடன், குறைத்த வட்டி விகிதத்தில் கடன் பெறவும் உதவும்.